18-12-2017, 01:44 PM
தன்மானம் கொண்ட தமிழினமே....
தவிக்கும் நிலையை எவரேனும் கண்டாரோ ?...
ஆழியில் அடத்துச்சென்ற எம் குமரி மீனவப்பரம்பரை.....
அனைத்தும் அறிந்தும் அநீதி கொண்ட அரசின் கேட்கா செவிப்பறை....
ஓயாத போராட்டம்....ஒளியணைந்த கண்களின் நீரோட்டம்.....ஆனால் உங்களுக்கோ ஒய்யார நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்.....
அண்டை அரசுடன் தங்களை இணைத்துக்கொள்ள கேட்கும் அவலநிலை...
மனிதாபிமானம் மண்ணுக்குள் செல்லும் நிலைப்பாடோ இன்னும் நகலவில்லை....
நிவாரணம் நல்குவதில் நியாயம் வேறு....
நில்லாமல் நெகிழ்ச்சியுற நீ என்செய்தாய் கூறு?
காற்றில் கலந்த உன்னத தலைவர்களுக்கு நிகரிங்கு யாரு ?
மதியோ மனமோ ஒன்றேனும் நீ கொண்டால் ....அரசின்
சதிதீர்த்து சமானிய மக்களையும்.....
சகஉயிராய் நீ மதித்து...
சங்கடம் தீர்த்திட வேண்டுகிறேன். ...
- லை.அப்துல் ஆசிக்.