thamil ptf ariviyal download
#1

Want to download...pls arranged quickly...very emergency
Reply
#2
நட்சத்திரங்களைக் காண நீங்கள் மெனக்கெடத் தேவையில்லை .
அவை நம்மை வரவேற்க எப்போதும் காத்திருக்கின்றன . இரவு வானில் நிலவு அல்லது மேகம் இல்லாத நாட்களாக இருந்தால் போதும் .
அமாவாசை இரவாக இருந்தால் கருமையான வெல்வெட் துணியில் வாரி இரைக்கப்பட்ட வைரங்களைப் போல நட்சத்திரங்கள் ஜொலிக்கின்றன .

எல்லா நட்சத்திரங்களும் ஒரே அளவிலான பிரகாசம் கொண்டவை என்று சொல்ல முடியாது . சில நட்சத்திரங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பிரகாசம் கொண்டவையாக உள்ளன .

வானத்து நட்சத்திரங்களிலேயே எது அதிகப் பிரகாசம் கொண்டது என்று கேட்கலாம் . நீங்கள் இருட்டியதிலிருந்து இரவு விடிய விடியக் கண் விழித்து வானத்து நட்சத்திரங்கள் அனைத்தையும் கவனித்து வந்தால் எது மிகப் பிரகாசமான நட்சத்திரம் என்று கண்டுபிடித்து விடலாம் .

என்றாலும் கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில் வானத்தை ஆராய்வதையே தொழிலாகக் கொண்ட நிபுணர்கள் ஏற்கெனவே இதைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர் . ஆகவே நீங்கள் சிரமப்படத் தேவையில்லை .

நட்சத்திரங்களிலேயே மிகப் பிரகாசமான அந்த நட்சத்திரத்தின் பெயர் சிரியஸ் (Sirius) . இது இப்போது உலக அளவில் பயன்படுத்துகின்ற பெயர் . இந்த நட்சத்திரத்துக்கு ஆல்பா கானிஸ் மேஜொரிஸ் (Alpha Canis Majoris) என்ற அறிவியல் பெயரும் உண்டு . பெரு நாய் நட்சத்திர மண்டலத்தின் முதன்மை நட்சத்திரம் என்பது இதன் பொருள் .

சிரியஸ் நட்சத்திரம் ஒரு நாட்டில் தான் தெரியும் என்பதில்லை . உலகில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து பார்த்தாலும் தெரியக்கூடிய நட்சத்திரம் . அறிவியல் யுகம் தோன்றியதற்கு முன்னர் உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் இந்த நட்சத்திரத்துக்குத் தங்கள் கருத்துப்படி வெவ்வேறு பெயர்களை வைத்தனர் .

ஆதியில் இந்தியாவில் வானவியலார் இந்த நட்சத்திரத்துக்கு மிருகவத்யா என்று பெயரிட்டனர் . லுப்தகம் என்ற பெயரும் உண்டு . எகிப்து , கிரேக்கம் , சீனா ஆகியவற்றில் இந்த நட்சத்திரம் வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டது . பசிபிக் கடல் தீவுவாசிகள் இதனை வானத்து ராணி என்று அழைத்தனர் . அது மிகவும் பொருத்தமானதே .

சிரியஸ் நட்சத்திரம் அலாதியான நீல நிறத்துடன் ஜொலிப்பதாகும் . ஒரு முறை அந்த நட்சத்திரத்தைப் பார்த்தால் அதை மறுபடி பார்க்க வேண்டும் என்று தோன்றும் . அது அவ்வளவு அழகு கொண்டது . நீங்கள் அந்த நட்சத்திரத்தைக் காண வேண்டுமென்றால் ஏப்ரல் மாத மத்தியில் இரவு சுமார் எட்டு மணிக்கு மேற்கு வானை நோக்கினால் போதும் . மிக எடுப்பாகத் தெரிகின்ற நட்சத்திரம் தான் சிரியஸ் நட்சத்திரம் .

இது கோடைக் காலத் தொடக்கம் . அனேகமாக வானில் மேகங்கள் இராது . கிராமப்புறமாக அதுவும் விளம்பர விளக்குகள் , தெரு விளக்குகள் , கடை விளக்குகள் இல்லாமல் நல்ல இருட்டாக இருக்கின்ற இடத்திலிருந்து பார்த்தால் சிரியஸ் அற்புதமாகக் காட்சி அளிக்கும் . இது தான் சிரியஸ் நட்சத்திரம் என்று அடையாளம் காட்டுவதற்கு உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை .
Reply
#3

அறிவியல் கட்டுரைகள் எழுதுவது என்பது அனைவருக்கும் கைவருவதில்லை. அவற்றை எழுதுபவர்களுக்கு முதலில் குறைந்த பட்சம் ஏதேனுமோர் அறிவியல் துறையில் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும். இரண்டாவதாக, அறிவியல் துறைகளில் நிகழ்ந்து வரும் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்களைக் குறித்த தெளிந்த அறிவும் மிகுந்த மதி நுட்பத்துடன் அவற்றைப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் அவசியம். மூன்றாவதாக, கட்டுரையாளருக்கு தாம் பயின்றுள்ள அறிவியல் துறை பற்றிய ஞானத்துடன் நின்று விடாமல் மற்ற அறிவியல் துறைகளைக் குறித்தும் ஓரளவு ஞானமும் அத்துறைகள் தொடர்பான தகவல்களையும் நன்கு புரிந்து கொள்ளும் ஆற்றலும் இருக்க வேண்டும்.
நான்காவதாக, அவ்வப்போது நிகழ்ந்து வரும் மிக சமீபத்திய அறிவியல் விந்தைகள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடிப்பிடித்து அவற்றை ஊன்றிப் படித்துப் புரிந்து கொள்வதோடு, அவற்றில் அதிகப் பலனுள்ள அதிசயமான நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், ஆய்வுகளைத் தெரிவுசெய்யும் திறமையும் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாவதாக, அந்த அறிவியல் விந்தைகளை அனைவருக்கும் புரியும் வகையில் எளிய நடையிலும் சலிப்பூட்டாத வகையில் சுவையோடும் எடுத்துச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றை எழுதும் விதம் வாசகர்கள் ரசித்து படித்து ருசிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
Reply

Important Note..!

If you are not satisfied with above reply ,..Please

ASK HERE

So that we will collect data for you and will made reply to the request....OR try below "QUICK REPLY" box to add a reply to this page
Popular Searches: current affairs tamil ptf, pacl latest news 2016 in thamil thinathanthi, vehicle skidcontrolsystem ptf, diesel engine working prinicple in ppt are in ptf, kvithai thottram thamil, thamil kavithai emage malar potos com, india ariviyal valarchi,

[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Possibly Related Threads...
Thread Author Replies Views Last Post
  kerala lottery winning number guessing app download download 1 903 19-02-2018, 02:41 PM
Last Post: dhanabhagya
  ariviyal valarchi nanmaigal theemaigal tamil points 0 1,766 23-11-2017, 09:04 PM
Last Post: Guest
  kerala lottery winning number guessing app download download 1 1,249 16-11-2017, 09:14 AM
Last Post: jaseela123d
  how to download m k venkataraman engineering mathematics book download 0 1,373 10-09-2017, 04:45 PM
Last Post: Guest
  ariviyal valarchi in india 0 439 31-08-2017, 10:58 PM
Last Post: Guest
  ariviyal valarchi nanmaigal tamil points 0 1,405 05-08-2017, 09:33 AM
Last Post: Guest
  download project report on social networking site in asp net free download 1 794 27-05-2017, 03:18 PM
Last Post: jaseela123d
Sad download image casia iris image database free download 1 910 15-05-2017, 09:30 AM
Last Post: jaseela123d
  free download computer graphics donald hearn pauline baker pdf download 1 1,103 06-05-2017, 04:53 PM
Last Post: jaseela123d
  download image casia iris image database free download 1 768 29-04-2017, 01:19 PM
Last Post: jaseela123d

Forum Jump: