03-12-2015, 11:37 AM
எட்டா கல்வியை
ஏட்டில் படித்தேன்
ஏட்டு கல்வியில்
முதலாம் மாணவன்
என்னறிவு போதுமென்று
எல்லா துறையிலும்
தேட தொடங்கினேன்
தேட தேட
புது அனுபவம்
என் சிந்தனையில்
முன்னோர் வாக்கு
தோண்ட தோண்ட
ஊறும் மணற்கேணியாய்
உலக கல்வி
வியந்து போனேன்
விண்ணை அளக்கும்
வின்வெளி முதல்
மண்ணை பிளக்கும்
விவசாயம் வரை
ஒவ்வொரு நாளும்
விஞ்ஞான அதிசயத்திற்கு
அடிப்படை கல்வியே...!
சிவகுமார் RT,
வைகுண்டபுரம்,
முளகுமூடு,
குமரி மாவட்டம்