Student Seminar Report & Project Report With Presentation (PPT,PDF,DOC,ZIP)

Full Version: பொன்னியின் செல்வன்
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.

Guest

வல்லவர் வழி வம்சம்தான்
மாவலியின் மறு அம்சம்தான்

வல்லத்து வீரன்தான்
வணங்கதா சூரன்தான்

ஆதித்யன் தோழன்தான்
அசராத பீமன்தான்..

வழி மாறி வரலைங்க
சோழம் குல காக்க வந்தேங்க..

ஆடி திருநாளில்
ஆசையாய் வந்தேங்க
கடல் போன்ற எரி ஒன்று
கதிகலங்கி போய் நின்றேனுங்க..

பெண்கள் கூட்டம் என்று
தயங்கி தயங்கி வந்தேங்க
தடம் பதித்து நின்னெனுங்க..

கடம்பூர் வந்தேங்க, கந்தமாறா என்றென்ங்க
கதிகலங்கி போனாங்க...

இவள் தான் என் தங்கை என்று அறிமுகம் செய்தான்ங்க.. இமை மூட மறந்தேன்ங்க..

அசையாமல் நின்றெங்க
அடுத்தநொடி சொன்னான்ங்க
இது
தழும்பேரிய சிங்கம் என்று...

மெதுவாய் சொன்னான்ங்க
மேலே சென்று படு என்று.,
புதுசாய் வந்தாங்க
முன்குடுமி நம்பி ஒன்று.

நடுநீசி நேரத்துல
நயவஞ்சக கூட்டம் ஒன்று
நடுவில் பார்த்தால் நானி போனேன் ..
நண்பா நீயுமா என்று..

கொள்ளிடம் தாண்டும்வரை
கொதிச்சி போய் நின்றேனுங்க..

குடந்தை நகரிலே
அழகிய பதுமை ஒன்று
அசைந்தே நடந்தம்மா
அடிமை ஆனேன்ம்மா...

பல்லக்கு சொந்தக்காரி
ஆண்டாள் கொண்டைக்காரி
தந்தாள் கணையாழியை
மந்திர கோட்டைக்குள்ளே
தந்திரம் செய்து வா என்று...

கோட்டை வாசல் தாண்ட
கோழை இவன் இல்லை என்று பிடித்தான் இரும்புப்பிடி ஒன்று
அசைந்தேன் ஒரு அடி இல்லை...

அரசனை காண வேண்டி ஆணவம் செய்தே நின்றேன்ங்க.

ஓலையை உருவி கொண்டு
ஓடிப்போ என்றே சொன்னாங்க...

அபயம் அபயம் என்று
அமைதியாய் சொன்னேன்ங்க
அரசன் அருகில் சென்று
இரகசியம் சொன்னேங்க..

இரும்பு கோட்டை அது
எப்படியோ வந்தேன்ங்க
உத்தமா என்று உயிரை தந்தேன்ங்க
கந்தா என்று கடமையை செய்தேன்ங்க...

மச்சினனை காண
மறு ஓலை தந்தாள் தையல்
கடலை தாண்டி கால் வைத்து சென்றேன்ங்க..

அவசரம் என்று அமைதியாய் சொன்னென்ங்க..
அடுத்தநோடி ஆனை
ஏறி வந்தோம்ங்க..

சோழ நாட்டிலே கோலம் போட்டுவிட்டு கொடுமை முடிஞ்சி போக..

கருக்கிபோன உடல் அங்கே
உருகி போன உயிர் இங்கே
உயிரை காக்கபோய்
உதை பட்டு நின்றெங்க...

கோட்டைகுள்ளே குலம் காஞ்சி போச்சுங்க
என் பலம் சாஞ்சி போச்சுங்க...

வந்தால் மகராசி
வாள் தந்தாள் கைராசி
வல்லத்து வீரரே
வளையாத சூரரே என்றாள்ங்க...

மச்சினன் தயவு இருக்கு
மங்காத உறவு இருக்கு
தங்க இடம் இருக்கு
தாங்க உயிர் இருக்கு
சோழம் பலம் இருக்கு
சொந்தம் இது உனக்கு
சொக்குப்போடி போட்டாள்ங்க
சொக்கிப்போய் நின்றேன்ங்க..

சோழ குலம் காத்தேன்ங்க...

இராசேந்திர மாமா என்றதும்
இரசிச்சி போய் நின்றேன்ங்க...

இராசராசன் மச்சான் என்றதும்
மறந்து போய் நின்றெங்க.,
மிச்ச கதை எல்லாம்
மெதுவா சொல்றேங்க....

வல்லத்து வீரன் நான்
வல்லவரையன் வந்தியத்தேவன்தான்.....

அன்புடன். சிவா..